×

மாலியில் கடத்தப்பட்ட குஜராத் வைர வியாபாரி ரூ.44 கோடி கொடுத்து மீட்பு

 

பமாக்கோ: குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தின் தார் பகுதியைச் சேர்ந்த ரமாணி(75). வைரவியாபாரி. தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சர்வதேச அளவில் வைர வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த அவர், மாலி தலைநகர் பமாக்கோவில் உள்ள தங்க சுரங்கத்தை சமீபத்தில் வாங்கினார்.

இதையடுத்து, கடந்த ஏப்ரலில் அங்கு தங்கியிருந்தபோது, அங்குள்ள உள்ளூர் கடத்தல் கும்பல் ரமாணியை கடத்தி சென்றது. அவரை விடுவிக்க வேண்டும் எனில், 100 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்தனர். 3 மாதத்துக்கு பிறகு ரூ. 44 கோடியை கொடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டுள்ளனர்.

Tags : Gujarat ,Mali ,Bamako ,Ramani ,Dhar ,Amreli district of ,US ,Mali, Bamako ,
× RELATED டெல்லி போராட்டத்தில் மாணவர்கள்...