×

காவிரி விவகாரம் ஆதவுக்கு புரியாது: ரகுபதி காட்டம்

 

சென்னை: மேகதாது விவகாரத்தில் திமுக மீது புகார் கூறிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு முன்னாள் அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; மேகதாது வழக்கில் திமுக அரசு சிறப்பாக வாதிட்டது. லாட்டரியில் கவனம் செலுத்தும் ஆதவ் அர்ஜுனாவுக்கு காவிரி விவகாரம் புரியாது. எதிர்ப்புகளை பதிவு செய்யவே நடுவர் மன்றம் கோரியது திமுக. கர்நாடகம் செல்ல ஏதாவது காரணம் கூற வேண்டும் என்பதற்காக திமுக மீது குறை கூறுகின்றனர். முரண்பாடுகளின் மொத்த உருவமே தவெகதான். காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காது. காவிரி விவகாரத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது தவெக G அரசு எடுத்த நடவடிக்கை என்ன? சட்டப்போராட்டத்தில் ஒருபோதும் திமுக அரசு கோட்டைவிட்டதில்லை என்றும் கூறினார்.

Tags : Aadav ,Ragupathi ,Chennai ,Former ,Minister ,Ragupati ,Aadav Arjuna ,Dimuka ,Megadad ,Dimuka government ,
× RELATED பூண்டி நீர்த்தேக்கத்தில் அதிகளவு...