×

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்: கொள்முதல் நிலைய ஊழியர்கள் போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக குற்றம்சாட்டி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரபரவில் கோடை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக திருவாரூர் மாவட்டம் குடவாசல், மன்னார்குடி, வலங்கைமான், நன்னிலம் மற்றும் கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பல நாட்களாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலே தேங்கி கிடப்பதால் மற்ற விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்ளமுதல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கொள்முதல் நிலைய ஊழியர்கள் குற்றச்சாட்டியுள்ளார்.

இதனால் விவசாயிகளுக்கும் கொள்ளமுதல் நிலைய பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே உடனடியாக முடங்கியுள்ள நெல் மூட்டைகளை எடுத்து செல்ல வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டலர் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலங்களில் உள்ள நெல் மூட்டைகளை நகர்வு செய்ய வேண்டும் அதேபோன்று பருவக்கால பணியாளர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு மூட்டைகளை தைப்பதற்கு சணல் வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை உடனடியாக பணி நிமர்த்தனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்போது இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvarur ,Thiruvarur district ,
× RELATED தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை...