விருதுநகர்: தவெக நிர்வாகியை கொன்றுவிடுவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தவெக ஒன்றிய செயலாளர் ராஜகுருவுடன் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசிய ஆடியோ வெளியானது. தவெக நிர்வாகி சாத்தூர் லட்சுமணன் தன் தொகுதிக்குள் நுழைந்தால் கொன்றுவிடுவதாக அமைச்சர் பேசியுள்ளார். ராஜபாளையத்தில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு சாத்தூர் லட்சுமணன் வந்துசென்றதற்கு அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மிரட்டல் பேச்சு ஆடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் அமைச்சருடன் பேசிய ராஜகுரு தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
