சென்னை: மைசூரிலிருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பசை டப்பா கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேகர் என்பவர் சமீபத்தில் மைசூரிலிருந்து வந்தே பாரத் ரயிலில் சென்னைக்குத் திரும்பி கொண்டிருந்தார். அப்போது IRCTC கேன்டீன் வழங்கிய உணவு தட்டில் ஒட்டும் தன்மையுள்ள ஜெல் (adhesive gel) பாக்கெட் ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து குறிப்பிட்ட பயணிகள் ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்து, எழுத்துப்பூர்வமான புகாரை ரயிலின் உணவாக மேலாளரிடம் அளித்து உள்ளார். உணவு ஒப்பந்ததாரரின் இந்த அலட்சியமான செயல் பயணிகளுக்குக் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்க கூடும் என்றும் அவர் தனது புகாரில் கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்து IRCTC பிரிவு அலுவலர் பயணியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
