வறட்சி பாதிப்புகளை கணக்கிட வலியுறுத்தி காய்ந்த பயிர்களை கொளுத்தி கருவாடு சுட்டு தின்ற விவசாயிகள்

*செய்யாறு அருகே நூதன போராட்டம்

செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பாராசூர் கூட்ரோடு பகுதியில் விவசாயிகள் வறட்சி காரணமாக பயிர் பாதிப்பு கணக்கீடு செய்ய வலியுறுத்தி நேற்று காய்ந்த பயிர்களை கொளுத்தி கருவாடு சுட்டு தின்று நூதன போராட்டம் நடத்தினர்.

காய்ந்த பயிர்களை அறுவடை செய்து விவசாயிகள் பயிர் கணக்கீடு செய்ய வேண்டும். ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதலீடு செய்து பயிர் செய்தும் பால் பருவ நேரத்தில் பயிர் காய்ந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு உடனடியாக வேளாண்துறை மூலம் விரைந்து கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

கிணறுகளில் தண்ணீர் வற்றி வறண்டு போய் விட்டதாக வேதனை அடைந்ததை கோஷங்கள் எழுப்பி வெளிப்படுத்தினர். விவசாயிகள் காய்ந்த பயிர்களை கொளுத்தி கருவாடு சுட்டு தின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: