ஸ்கூட்டர் ஓட்டிய சிறுவன் தாய்க்கு ரூ.26 ஆயிரம் அபராதம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சிதறா போலீசார் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 14 வயது சிறுவன் ஸ்கூட்டர் ஓட்டி வந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுவனை தடுத்து நிறுத்தினர். இந்த வழக்கு கடைக்கல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாகனத்தின் உரிமையாளரான சிறுவனின் தாய்க்கு ரூ. 26 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

Related Stories: