கீவ்: உக்ரைனின் வட கிழக்கு பகுதியான சுமி பிராந்தியத்தில் ரஷ்யா நேற்று ஏவிய டிரோன் தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலையடுத்து ஜபோரிஜியாவில் உள்ள சுற்றுலா தளங்கள் மீது உக்ரைன் நடத்திய பதிலடி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் பலியானார்கள். 14 பேர் படுகாயமடைந்தனர். ஜபோரிஜியாவின் ஒரு சில பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
