மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் பொறுப்பு: ராகுல்காந்தி

டெல்லி: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்; உலகம் முழுவதும் சிறப்பாக அறியப்பட்ட இந்திய கல்வி முறை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. நமது கல்வி முறையை சேதப்படுத்தியது பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் -ன் தவறு. பிரதான் ராஜினாமா நமது கல்வி முறையை மறுவடிவமைக்க மாபெரும் முயற்சி. நாடு முழுவதுமுள்ள மாணவர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

பெல்லெட் துப்பாக்கிகள் மூலம் நமது நாட்டின் எதிர்காலத்தை தாக்கியுள்ளனர். மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார்; அவர்களுக்கு ஆதரவு அளிப்பதே எங்கள் நிலைப்பாடு. பிற எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்து நாடாளுமன்றத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும். ஒன்றிய பாஜக அரசை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. மாணவர்களுக்கு மதிப்பளித்து பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். கல்வி அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும்

மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். மக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை ஒன்றிய அரசு கேட்க வேண்டும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் பொறுப்பு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: