×

தமிழ்நாடு, புதுவையில் அமைச்சர் அமித்ஷாவின் 2 நாள் பயணம் திடீர் ரத்து

 

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை (25ம் தேதி) காலை 11.20 மணியளவில், கர்நாடக மாநிலம் ஹூப்ளியிலிருந்து தனி விமானம் மூலமாக சென்னை வருவதற்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்தது. பின்னர், இங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி மாநிலத்துக்கு செல்வதாக இருந்தது. பின்னர் 26ம் தேதி காலை 11.30 மணியளவில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை விமான நிலையத்துக்கு வந்து தனி விமானம் மூலமாக டெல்லி செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், டெல்லியில் கடந்த 4 நாட்களாக மாணவர்கள், இளைஞர்களின் தொடர் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் 2 நாள் பயணம் ரத்து செய்யப்பட்டதாக விமானநிலைய அதிகாரிகளுக்கு டெல்லியில் இருந்து தகவல் வந்துள்ளது.

Tags : Minister ,Amitsha ,Puduju, Tamil Nadu ,Chennai ,Union Minister of Interior ,Tamil Nadu ,New States ,Hubli ,
× RELATED மாணவர்கள் போராட்டத்தின் முக்கிய...