×

8 மாவட்டங்களில் ஜூலை 28 வரை சுட்டெரிக்க போகும் வெயில்.!!

சென்னை: தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு (ஜூலை 28 வரை) வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு (ஜூலை 24 முதல் ஜூலை 28 வரை) அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை விட 2°C முதல் 4°C வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டு உள்ளது.

தமிழகத்தில் தற்போது நிலவும் இந்த திடீர் வெப்பநிலை அதிகரிப்பிற்கு தென்மேற்கு பருவமழையில் ஏற்பட்ட சுணக்கம், வறண்ட வானிலை மற்றும் கடல்காற்று தாமதமாவது ஆகியவையே முக்கிய காரணங்கள் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் சராசரி கடல் மட்டத்தில் குஜராத்திலிருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. அதே நேரம் தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Chennai Meteorological Centre ,Tamil Nadu ,
× RELATED மாணவர்கள் போராட்டத்தின் முக்கிய...