×

டெல்லியில் மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக அதிர்ச்சி தகவல்!

டெல்லி: டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 20ஆம் தேதி மாணவர்களின் பேரணியின் போது காவல்துறை நடவடிக்கையில் காயமடைந்த போராட்டக்காரர்களில் ஷேக் மன்சூரி என்பவருக்கு பெல்லட் கன் தாக்குதலால் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என தகவல் வெளியிடப்பட்டது.

மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கியை பயன்படுத்தியதை மருத்துவர்கள் காயங்கள் மூலம் உறுதிப்படுத்தினர். பெல்லட் துப்பாக்கி போலவே போராடிய மாணவர்கள் மீது மின்சார ஷாக் கொடுக்கும் லத்தி பயன்படுத்தப்பட்டது என தகவல் வெளியிடப்பட்டது. போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதாகவும், பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது, ​​ஜந்தர் மந்தர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெல்லி காவல்துறையுடன் இணைந்து பணியில் ஈடுபடுத்தப்பட்ட, மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) கீழ் இயங்கும் கலவரத் தடுப்புப் பிரிவான RAF -இன் உபகரணங்களை பயன்படுத்தி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிகளில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தியதாக வெளியான தகவலுக்கு டெல்லி போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி துணை காவல் ஆணையர் கூறுகையில், அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக காவல்துறை பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதாகக் கூறும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்துபவை என்று அவர் கூறியுள்ளார்

மேலும், சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தைப் பகிரவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வன்மையாக அறிவுறுத்தப்படுகிறது. எந்தவொரு தகவலையும் பதிவிடுவதற்கு அல்லது அனுப்புவதற்கு முன், அதிகாரப்பூர்வ மூலங்களிலிருந்து உண்மைகளைச் சரிபார்க்கவும் என்று கூறினார்.

 

.

 

 

 

 

Tags : Delhi ,Sheikh ,Mansuri ,
× RELATED முதல்வர் அலுவலக அறிக்கைகள் மாயம்...