×

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கக்கோரி திமுக நோட்டீஸ்

டெல்லி: மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கக்கோரி திமுக நோட்டீஸ் வழங்கியுள்ளது. அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து இதுகுறித்து விவாதிக்க திமுக எம்.பி.க்கள் டிஆர் பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று பலத்த அரசியல் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற தொடங்கியதில் இருந்து நீட் விவகாரம், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வியெழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக விவாதிக்க கோரி திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

Tags : DMK ,Parliament ,Karnataka government ,Megedadu ,Delhi ,MPs ,TR Balu ,Trichy Siva ,
× RELATED கரூர் நெரிசலில் இறந்தவர்களின்...