திருப்பதி மக்களிடம் இருந்து பெறப்பட்ட குறைதீர்வு கூட்ட மனுக்களை புறக்கணித்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்

*அதிகாரிகளுக்கு டிஆர்ஓ எச்சரிக்கை

திருப்பதி : திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி நரசிம்முலு கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அப்போது, பொது குறைதீர்வு தளத்தில் விண்ணப்பங்களுக்கு தரமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும், விண்ணப்பதாரர்களின் பிரச்னைகள் புறக்கணிக்கப்படக்கூடாது. மனுதாரருக்குத் திருப்தி அளிக்கும் வகையில் மனுக்களை தீர்க்க வேண்டும். மனுக்கள் புறக்கணிக்கப்பட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஆர்ஓ கூறினார்.

கூட்டத்தில் வருவாய் துறை- 261, பஞ்சாயத்து ராஜ் துறை- 35, உள்துறை-21, நில அளவைத் துறை-21 நகராட்சி நிர்வாகம்-20, பள்ளிக் கல்வி-9, வேளாண்மைத் துறை-6, மின்சாரத் துறை-6, நீர்வளத்துறை- 5, பதிவுத்துறை-4, இடைநிலைக் கல்வி-4, இரண்டாம் நிலை சுகாதாரம்-3, ஆர்டிசி-3, தோட்டக்கலை-3, குடிமைப் பொருள் வழங்கல்-3, அறநிலையத் துறை- 2, தொழிலாளர் துறை- 2, ஊரக வளர்ச்சி-2, ஸ்வர்ண வார்டு ஸ்வர்ண கிராமம்-2, சாலை, கட்டிடங்கள்-2, சமூக நலத்துறை-2 என மொத்தம் 446 மனுக்ககள் பெறப்பட்டது.

Related Stories: