×

இந்தியாவுடன் 3வது ஒருநாள் போட்டி இங்கிலாந்து அணி வெற்றி: தொடரையும் கைப்பற்றியது

லண்டன்: இந்திய அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில், இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, கடைசி போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, வாஷிங்டன் இருவரும் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவர்களுடன் துபேவுக்கு பதிலாக கே.எல்.ராகுல், அர்ஷ்தீப், பிரின்ஸ் சேர்க்கப்பட்டனர்.

இங்கிலாந்து அணியில் சகிப் மகமூதுக்கு பதிலாக ஜோஷ் டங் இடம் பெற்றார். டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் பேட் செய்ய முடிவு செய்தார். பென் டக்கெட், ஜேக்கப் பெத்தெல் இணைந்து இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர். உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 30 ஓவரில் 192 ரன் சேர்த்தது. பெத்தெல் 91 ரன் (93 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பிரசித் வேகத்தில் ரோகித் வசம் பிடிபட்டார். அடுத்து டக்கெட் ஜோ ரூட் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 101 ரன் சேர்த்தனர்.

அபாரமாக விளையாடி சதம் அடித்த டக்கெட் 141 ரன் (18 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்சி கொடுத்து வெளியேறினார். கேப்டன் ஹாரி புரூக் 12 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.  கடைசி கட்டத்தில் ஜோ ரூட் ஜோஸ் பட்லர் இணைந்து இந்திய பந்துவீச்சை பதம் பார்க்க, இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 387 ரன் குவித்தது. ரூட் 74 ரன் (48 பந்து, 9 பவுண்டரி), பட்லர் 41 ரன்னுடன் (13 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்ர்.

இந்திய பந்துவீச்சில் பிரசித் 2, பிரின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 388 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் ஷர்மா, கேப்டன் கில் இணைந்து துரத்தலை தொடங்கினர். ஓய்வு பெறப்போவதாக வதந்திகள் பரவிய நிலையில், பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்துடன் ரோகித் விளையாடினார்.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் எடுத்தது. இதனால், 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. இதன் மூலம், 2-1 என்ற கணக்கில் தொடரை அந்த அணி கைப்பற்றியது.

 

Tags : England ,India ,London ,Lord's… ,
× RELATED ரோகித் பேட்டிங் கண்ணுக்கு விருந்தாக இருந்தது: கேப்டன் கில் பேட்டி