வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 5 ஆயிரத்தை கடந்தது

காரகாஸ்: தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த மாதம் 24ம் தேதி இரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 125 ஆண்டுகளுக்கும் மேலான வெனிசுலா வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரிடராக இது பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காரகாஸ், மற்றும் லா குவைரா பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. குடிநீர் விநியோகம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு, இன்னும் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5069 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மாற்றமின்றி 16,740ஆக நீடித்து வருகிறது.

Related Stories: