சென்னை: தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், எழுத்தாளருமான டாக்டர் கிருதியா (62), நேற்று மாலை 5 மணியளவில் மாரடைப்பு காரணமாக திடீரென்று மரணம் அடைந்தார். அவர் ‘துள்ளித் திரிந்த காலம்’, ‘பரமசிவன்’, ‘தில்லுக்கு துட்டு’ உள்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். ‘ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வரவேண்டும்’ உள்பட பல பக்தி பாடல்களை எழுதியுள்ளார். அவருக்கு மனைவி, ஒரு மகன் இருக்கின்றனர். பாடலாசிரியர் கிருதியாவின் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.
