- ஊட்டி
- திருப்பூர்
- விஜய்
- புச்சிரெட்டிபள்ளி
- குதிரட்டிப்பட்டி, திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்
- தேன்மொழி
- Subhasree
- குமார்
- காவ்யா
- இலக்கியா
- நீலகிரி…
திருப்பூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, குதிரட்டிப்பட்டி புச்சிரெட்டிபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (30). நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி தேன்மொழி. இவர்களது மகள் சுபஸ்ரீ (6). இவர்கள் மற்றும் விஜயின் சகோதரர் குமார் (36), காவ்யா, இலக்கியா உள்ளிட்ட 8 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று முன்தினம் இரவு திருத்தணியிலிருந்து காரில் சுற்றுலா புறப்பட்டனர். நேற்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தபோது ரோட்டின் ஓரத்தில் காஸ் டேங்கர் லாரி நின்றிருந்தது. எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதி நசுங்கியது. இடிபாடுகளில் சிக்கி விஜய், தேன்மொழி, குமார் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற 5 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
