தொண்டாமுத்தூர், ஜூலை 18: கோவை அருகே காளம்பாளையம் கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகில் இந்துஸ்தான் பெட்ரோலியம் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு குரு வாகன புகை பரிசோதனை நிலையம் நேற்று துவக்கப்பட்டது. உரிமையாளர் மேட்டுப்பாளையம் எஸ்.எம்.டி சாமில் தொழிலதிபர் சசிரேகா, ஜஸ்டின் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட துணை தலைவர் தீத்திபாளையம் கொங்கு பெரியசாமி பரிசோதனை நிலையத்தை துவக்கி வைத்தார். சாய்ராம் ஏஜென்சீஸ் கோபி இனிப்பு வழங்கினார். இன்ஜினியர் ராமராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் அய்யாசாமி, ஸ்கோடா சரவணகுமார், பால் கிருஷ்ணசாமி, மதிவாணன், பத்மநாபன், ரியல் மூர்த்தி, எல்ஐசி தேவராஜன், பொன்.தேவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
