சாயிபாபா காலனி மேம்பாலம் பணி நிறைவு

 

கோவை, ஜூலை 20: கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபாகாலனி பகுதியில் 1140 மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி பாதையாக மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டது. 76 கோடி ரூபாய் செலவில் பஸ் ஸ்டாண்ட் முதல் எருக்கம்பெனி வரை இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு, என்எஸ்.ஆர் ரோடு, காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக இந்த மேம்பாலம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக பணி நடத்தப்பட்டு வந்தது. இந்த பணி விரைவில் முடிவடையும். 17.50 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. 22 தாங்கு தூண்கள் மற்றும் 52 மீட்டர் கர்டர் அமைத்து மேம்பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சர்வீஸ் ரோடு மற்றும் அதன் சுற்றுப்பகுதி சீரமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த விட்டது. விரைவில் மேம்பாலம் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது.

Related Stories: