சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.240 குறைந்தது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்ததது. இதற்கிடையில் கடந்த 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,600 வரை குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்திருந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று அதிகரித்தது.
அதாவது கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,180க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,440க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று மீண்டும் தங்கம் விலை குறைந்தது. அதன்படி நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,150க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,200க்கும் விற்றது. வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்று மாற்றம் ஏதுவும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240க்கும், பார் வெள்ளி ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனையானது.
