×

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகரித்து வரும் போக்கு ஆபத்தானது – இ.கம்யூ., எம்.பி கண்டனம்

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகரித்து உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி-யான சுப்பராயன் கண்டனம் தெரிவித்து உள்ளார். மாநிலத்தில் அதிகரித்து காணப்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்ய முதல்வர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சாடி உள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற பிரச்சாரங்களில் பேசியது போல அவர் முதல்வரானதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரிசெய்யும் வகையில் முதல்வர் விஜய் செயல்படவில்லை என்றும் சுப்பராயன் குறிப்பிட்டு உள்ளார். தமிழகத்தில் நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்கள் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இது ஆபத்தானது என்றார்.

இந்த போக்கை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதே போல நாங்கள் ஒருபோதும் தவெக அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம். அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணையும் போக்கை வெறுக்கிறோம்.

Tags : Tamil Nadu ,E. ,Chennai ,Indian Communist Party ,P-Yana Superarayan ,Chief Minister ,Vijay ,
× RELATED உலகளவில் சரிந்த அமெரிக்காவின் நன்மதிப்பு.! முதலிடம் பிடித்த சீனா…