×

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 150 MBBS இடங்கள் அதிகரிப்பு… ஒப்புதல் அளித்துள்ள தேசிய மருத்துவ ஆணையம்

சென்னை: தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2026-27 கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் (MBBS) இடங்கள் கூடுதலாக 150 அதிகரிக்கப்பட்டுள்ளன. தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. தமிழகத்தில் நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர் என மொத்தம் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில், தலா 50 இடங்கள் வீதம், மொத்தம் 150 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலமாக இந்த 3 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 100-லிருந்து 150 ஆக அதிகரித்துள்ளது.

இந்த 150 கூடுதல் இடங்களின் ஒதுக்கீட்டால், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 5,349-ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை சேர்த்து இந்த கல்வியாண்டில் மொத்தம் 13,999 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அதிக எம்பிபிஎஸ் இடங்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 15,395 இடங்களுடன் கர்நாடகா முதலிடத்திலும், 14,000 இடங்களுடன் உத்தரபிரதேசம் இரண்டாமிடத்திலும், 13,999 இடங்களுடன் தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : MBBS ,Tamil Nadu Government Medical Colleges ,National Medical Commission ,Chennai ,NMC ,Medical Colleges ,Namakkal, Tiruppur ,Thiruvallur ,Tamil Nadu ,
× RELATED தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்.!!...