×

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்.!! 17-ஆம் தேதி வரை வெப்ப அலை நீடிக்கும் என எச்சரிக்கை

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், இன்றிலிருந்து 3 நாட்களுக்கு அதாவது ஜூலை 17 வரை சில மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெப்ப அலை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் பகல் நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்த்து கொள்ளுமாறு சென்னை வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், குறிப்பாக தமிழகத்தில் இன்று முதல் வரும் ஜூலை 17-ஆம் தேதி வரை 17 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரித்து உள்ளது.

இன்றும், நாளையும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஜூலை 17 அன்று நாமக்கல், கரூர், ஈரோடு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை தொடர வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Puduju ,
× RELATED உக்ரைன் போரில் அணு ஆயுதத் தாக்குதலை...