ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை: ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தனியாருக்கு இணையாக ஆவின் நிறுவனத்தை உருவாக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இன்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக, பால்வளத்துறை ஆய்வுக் கூட்டத்தில் ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதலை அதிகரிக்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். ஆவின் பால் விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்தவும், தனியாருக்கு இணையாக ஆவின் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

குறிப்பாக, பால் கொள்முதல் விலையை அதிகரிப்பது தொடர்பாக விரைவில் தமிழ்நாடு அரசு முடிவெடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்பது முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

அதன் அடிப்படையில், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலையைத் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக உயர்த்தவும், அதன் விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் பாலின் தரத்தை மேம்படுத்தி, மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய முக்கியத்துவம் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியிருக்கிறார்.

Related Stories: