சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 10% உயர்வு

வாஷிங்டன்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று ஒரே நாளில் சுமார் 10% உயர்ந்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய கப்பல்களை முற்றுகையிடுவதாக ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 9.62% உயர்ந்து ஒரு பேரல் 83.32 டாலர் ஆகவும், WTI கச்சா எண்ணெய் விலை 9.4% உயர்ந்து ஒரு பேரல் 78.14 டாலர் ஆகவும் அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் கச்சா எண்ணெய் விலை 4% உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 13.48% உயர்ந்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்போர் தாக்குதல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி 3 மாதங்களுக்கு ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதனால் உலகநாடுகளில் எரி பொருள் பற்றாக்குறை ஏற்பட்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டது.

பல நாடுகளில் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அமைதி பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஹார்முஸ் நீரிணையில் சென்ற வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து பதற்றம் உச்சகட்டத்தை எட்டியது. இதற்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள ஏவுகணை தளங்கள், விமானப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் தொடர்ந்து மூன்றாவது நாளாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் மீண்டும் ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Stories: