பன்னீர்ரோஜா பூக்கள் விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி

ராயக்கோட்டை, ஜூலை 14: ராயக்கோட்டையில், பன்னீர்ரோஜா பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ராயக்கோட்டை மற்றும் ஓசூர் வரை மண் ஈரப்பதம் நிறைந்து காணப்படுகிறது. தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில் இருந்து சுமார் 15 கிமீ தொலையில், ராயக்கோட்டை அமைந்துள்ளது. அங்கு காய்கறிகள் சாகுபடிக்கு அடுத்து பூக்கள் அதிகம் விளைச்சல் செய்து, ராயக்கோட்டை சந்தைக்கு விற்பனைக்கு விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர்.

தற்போது, ராயக்கோட்டை பகுதியில் உள்ள பண்டப்பள்ளியில், பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆடி மாத பிறப்பிற்கு 3 நாட்கள் உள்ள நிலையில், பூக்கள் தேவை அதிகரிக்கும். ராயக்கோட்டை பகுதியில் பன்னீர்ரோஜா பூக்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது, நல்ல விளைச்சலை கொடுத்துள்ள பூக்களை, ஓரிரு தினங்களில் விவசாயிகள் அறுவடை செய்ய உள்ளனர். ஆடி மாதத்தில் பூக்கள் தேவை அதிகரிக்கும் என்பதால், நல்ல வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: