×

நத்தம்பட்டி டோல்கேட்டில் 24ம் தேதி முற்றுகை போராட்டம்: மோட்டார் வாகன சங்கம் அறிவிப்பு

வில்லிபுத்தூர், ஜூலை 14: நத்தம்பட்டி டோல்கேட்டை அகற்றக்கோரி 24ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மோட்டார் வாகன சங்கம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு மற்றும் அனைத்து மோட்டார் வாகன சங்கங்கள் இணைந்து வில்லிபுத்தூர் சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், வில்லிபுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலை விதிகளுக்கு மாறாக அமைக்கப்பட்டுள்ள நத்தம்பட்டி டோல்கேட்டை உடனே அகற்றக்கோரி சிஐடியு அனைத்து மோட்டார் சங்கங்கள் இணைந்து 24ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்திற்கு சிஐடியு மாவட்ட உதவி தலைவர் திருமலை தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் தேவா, தமிழ்நாடு சாலை போக்குவரத்து சிஐடியு சங்கத்தின் மாநில நிர்வாகி கண்ணன், ராஜபாளையம் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மாடசாமி, மணிகண்டன் மற்றும் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags : Nathampatti tollgate ,Motor Vehicle Association ,Villiputhur ,CITU ,Motor Vehicle Associations ,Villiputhur Association ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்