×

பேருந்து நிறுத்தத்தை புறக்கணித்த அரசு பஸ்

நெல்லை, ஜூலை 14: பொட்டல்புதூர் பேருந்து நிறுத்தத்தை புறக்கணித்து சென்ற அரசு பேருந்தால் பயணிகள் கடும் அவதியடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடையத்தில் இருந்து நெல்லை நோக்கி இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பொட்டல்புதூர் மேல் பஸ்நிறுத்தம் மற்றும் கீழ் பஸ் நிறுத்தம் (தர்கா அருகில்) வழியாகச் செல்வது வழக்கம். ஆனால், நேற்று காலை கடையத்திலிருந்து நெல்லை நோக்கி புறப்பட்ட 129 என்ற எண் கொண்ட அரசு பேருந்து கீழ் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல், மேல் நிறுத்தமத்தில் இருந்து நேரடியாக முக்கூடல் சாலை வழியாக சென்றுள்ளது. இதனால், கீழ் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பொதுமக்கள், பயணிகள் மற்றும் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். பலர் நீண்ட நேரம் அடுத்த பேருந்து வரும் வரை காத்திருந்து அதன்பிறகு சென்றனர். இதனால் பணி நிமித்தமாக செல்வோர், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்தனர். இப்பகுதியில் அடிக்கடி இத்தகைய சம்பவங்கள் நடப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, பயணிகளின் சிரமத்தை தீர்க்க வேண்டும் என்று பயணிகள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமஜக தென்காசி மாவட்ட செயலாளர் ஹயாத் அன்சர் கூறுகையில், ‘பேருந்து நிறுத்தத்தை புறக்கணித்து சென்ற நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும்’ என்றார். உவரி கடற்கரையில் 480 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் நெல்லை, ஜூலை 14: நெல்லை மாவட்ட சுற்றுலாத்துறை முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றான உவரி கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகள் முறைசாரா குப்பை சேகரிப்போர் (மறுசுழற்சி பாதுகாவலர்கள்) சார்பில் நடந்தது.

உவரி கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வினை உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் அதிகாரி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். உவரி கடற்கரையில் மட்டுமே சுமார் 480 கிலோவுக்கும் அதிகமான பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் இதர குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. இதில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் நிர்வாகத்தினர், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் 16 மறுசுழற்சி பாதுகாவலர்கள், 10 தன்னார்வலர்கள் என 38க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். உவரி கடற்கரையில் கிடந்த பேப்பர், சாப்பாடு தட்டு, செருப்புகள், ஐஸ் அட்டைகள், வாட்டர் பாட்டில், ஜூஸ் கேன் என சுமார் 480 கிலோவுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கப்பட்டன. மேலும், கடலில் இருந்து வெளியேறிய பழைய துணிகளையும் சேகரித்து அப்புறப்படுத்தினர். குப்பைகள் சேகரிக்கப்பட்டு உள்ளாட்சி வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

கடற்கரை பகுதிகளில் இதுபோன்று சுத்தம் செய்யும் பணியை அடிக்கடி நடத்திட ெபாதுமக்கள் கேட்டு கொண்டனர். இந்நிகழ்வை மார்ட்டின் மற்றும் ஜெயா மற்றும் சுற்றுலாத்துறையினர் ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில் உவரி சுயம்புலிங்க கோயில் ஊழியர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். ெபாதுமக்கள் வசிக்கும் பகுதி வழியேகழிவுநீர் வாறுகால் கொண்டு செல்ல கூடாது நெல்லை, ஜூலை 14: பொதுமக்கள் வசிக்கும் பகுதி வழியாக கழிவுநீர் வாறுகாலை கொண்டு செல்ல கூடாது என வடக்கு தாழையூத்து பகுதி மக்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.

நெல்லை வடக்கு தாழையூத்து ஜக்கம்மாள் நகர் பகுதி பொதுமக்கள் 4வது வார்டு உறுப்பினர் இசக்கிராணி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘வடக்கு தாழையூத்து ஜக்கம்மாள் கோயில் பகுதியில் தலித் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். வடக்கு தாழையூத்து பகுதியில் ஆத்தியப்பசாமி கோயில் ஓடையில் மழைநீர் மற்றும் வீட்டு கழிவு தண்ணீர் செல்வதற்கு 50 ஆண்டுகளாக வசதிகள் உள்ள நிலையில் எங்கள் பகுதிக்கு வாறுகால் தோண்டுவதாக கூறி கழிவுநீரை திருப்பி விட முயற்சிக்கின்றனர். வாறுகால் பிரச்னையால் எங்கள் பகுதியில் சண்டை சச்சரவுகள் நிகழ்கின்றன. எனவே தோண்டிய வாறுகாலை மூடிவிட்டு, எங்கள் பகுதிக்கு கழிவநீர் வருவதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு அளிக்கும் நிகழ்ச்சியில் தமிழ்புலிகள் மாநில துணை செய்தி தொடர்பாளர் நெல்லை தமிழரசு, மாநில அமைப்பு செயலாளர் தச்சை மாடத்தி, நெல்லை மாவட்டச் செயலாளர் பாண்டியன், பாளை ெதாகுதி தலித் கண்ணன், நெல்ைல தொகுதி ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Nellai ,Pottalputhur ,Pottalputhur Upper Bus Stop ,Lower… ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்