சென்னை: தமிழ்நாட்டில் எம்எல்ஏக்கள் குதிரை பேரம் நடப்பதாக இந்திய கம்யூ. மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். எம்எல்ஏக்கள் குதிரை பேரம் தடுக்கப்பட வேண்டும், குதிரைபேரத்தை தடுப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு நல்லது என்று அவர் தெரிவித்துள்ளார். எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தும் கலாச்சாரம் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பரவியுள்ளது. தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே குதிரைபேரம் என கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
