×

மணலி எம்ஜிஆர் நகரில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் மறியல்

திருவொற்றியூர்: மணலியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மணலி மண்டலம், 20வது வார்டு, எம்ஜிஆர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மின்தடையை கண்டித்து மணலி மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிடுவதும், சாலை மறியல் போராட்டம் செய்வதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஆனால் மின்தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் எம்ஜிஆர் நகர் பகுதியில் மீண்டும் மின்தடை ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் மின்சாரம் வரவில்லை. அதனைத் தொடர்ந்து மணலி பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காமராஜ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மணலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Manali MGR Nagar ,Thiruvottiyur ,Manali ,MGR Nagar ,
× RELATED திருவள்ளூரில் பாய்லர் வெடித்து...