×

சிவகாசியில் அதிரடி சோதனை: சட்டவிரோதமாக பட்டாசு வைத்திருந்த கடைக்கு ‘சீல்’

சிவகாசி, ஜூலை 13: சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சட்டவிரோதமாக பட்டாசுகள் வைத்திருந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. சிவகாசியில் உள்ள சாத்தூர் செல்லும் ரோட்டில் மயிலாடுதுறை பஸ் ஸ்டாப் அருகில் உள்ள பட்டாசு கடைகளில், அனுப்பன்குளம் விஏஓ ஜெயபால் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையில் அரசு அனுமதித்துள்ளதைவிட கூடுதல் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்த விஏஓ, அந்த கடைக்கு சீல் வைத்தார். இந்த விதிமீறல் குறித்து சிவகாசி கிழக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் பட்டாசு கடையின் உரிமையாளர் சரவணன் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியில் திருத்தங்கல் விஏஓ சதிஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர், சட்ட விரோதமாக தகர செட்டில் பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதுகுறித்து திருத்தங்கல் போலீசில் விஏஓ சதிஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்துக்கு சொந்தமான இடத்தில் இருந்து பட்டாசு தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான செல்வத்தை தேடி வருகின்றனர்.

Tags : Sivakasi ,Mayiladuthura ,Chathur ,Anuppankulam VAO Jayapal ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்