×

ஜானகி அம்மாவின் மறைவு இசை உலகிற்கு பேரிழப்பு – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

டெல்லி:புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

“மதிப்பிற்குரிய பின்னணி பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவு, இசை மற்றும் கலாச்சார உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள் தலைமுறைகள் கடந்து இன்றும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன.

ஈடு இணையற்ற நளினத்துடனும், பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்வையும் தங்களது குரலால் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரது இனிமையான பாடல்கள் வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கும் கேட்போரைத் தொடர்ந்து மந்திரித்து ஆட்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

இந்த துயரமான வேளையில், ஜானகி அம்மாவின் குடும்பத்தினருக்கும், உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும், இசைத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”இவ்வாறு பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Janaki ,Narendra Modi ,Delhi ,
× RELATED நைஜீரியாவில் பயங்கரவாதிகளால்...