×

வியட்நாம் படகு விபத்து: பழனி இளைஞர் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழப்பு; அவசர உதவி எண்களை அறிவித்தது ஒன்றிய அரசு!

டெல்லி: வியட்நாமில் இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவான ஹான் மே ருட் ங்வோய் தீவிற்கு இந்தியர்கள் உள்ளிட்ட 32 சுற்றுலா பயணிகள் மற்றும் 3 ஊழியர்கள் என மொத்தம் 35 பேருடன் இன்று காலை 11 மணியளவில் படகு ஒன்று புறப்பட்டது. அப்போது திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக படகு கட்டுப்பாட்டை இழந்து கடலில் தலைகீழாக கவிழ்ந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வியட்நாம் மீட்புப் படையினர் 18 பேரை உயிருடன் மீட்டனர். எனினும், இந்த விபத்தில் 15 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருகபிரபு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலில் மாயமான மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “வியட்நாமின் ஃபூ குவோக் அருகே இந்தியர்கள் பயணித்த படகு விபத்து குறித்த செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். நமது தூதரக அதிகாரிகள் வியட்நாம் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த விபத்தையடுத்து, வியட்நாமின் ஹோ சி மின் மற்றும் ஹனோய் நகரங்களில் அவசர கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தகவல்களைப் பெற ஒன்றிய அரசு பின்வரும் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது:

ஹோ சி மின் கட்டுப்பாட்டு அறை: +84 36 281 7930, +84 91 552 3714, +84 33 452 0414

ஹனோய் கட்டுப்பாட்டு அறை: +84 91 308 9165

Tags : Vietnam ,EU government ,Delhi ,Dindigul district ,Shri Narendra Modi ,
× RELATED தவெக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம்: நயினார் நாகேந்திரன் சாடல்