மகளிர் விடியல் பயணம் பெயரை மாற்றிய அதிர்ச்சி மறைவதற்குள் தமிழகம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட விடியல் பயணப் பேருந்துகளையும் குறைத்த தவெக அரசு: வேலைக்கு செல்லும் பெண்கள் கடும் அதிர்ச்சி

 

சென்னை: மகளிர் விடியல் பயண பெயரை மாற்றிய அதிர்ச்சி மறைவதற்குள், தமிழகம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட விடியல் பயணப் பேருந்துகளையும் தவெக அரசு குறைத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழகம் முழுவதும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் மத்தியில் பெயர் எடுத்த திட்டங்களின் பெயர்களை எல்லாம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. திமுக ஆட்சியில் தமிழகத்தில் ெகாண்டு வரப்பட்ட மகளிர் உரிமை திட்டம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தும் அளவுக்கு பெயர் வாங்கியது.

அதேபோன்று பள்ளி மாணவர்களுக்காக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இலவச காலை உணவு திட்டமும் பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. அந்த அளவுக்கு திமுக ஆட்சியில் பல்வேறு சூப்பர் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை எல்லாம் தற்போது பொறுப்பேற்றுள்ள தவெக அரசால் கை வைக்க முடியாது. அப்படி செய்தால் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை சம்பாதிக்க வேண்டும் என்பதால் அந்த திட்டங்கள் தொடர்ந்து வருகிறது. ஆனால் அந்த திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தவெக அரசு செயல்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதாவது திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சூப்பர் திட்டங்களின் பெயர்களை மாற்றி வருவது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

கடந்த திமுக ஆட்​சி​யில் முதல்​வ​ராக ஸ்டா​லின் 2021 மே 7-ம்தேதி பதவி​யேற்​றவுடன், நகரப் பேருந்​துகளில் பெண்​கள் இலவச​மாக பயணம் செய்​யும் திட்​டத்தை அறி​முகம் செய்​தார். அரசுப் போக்​கு​வரத்​துக் கழகங்​களில் இயக்​கப்​படும் 9,000 நகரப் பேருந்​துகளில் 7,200-க்​கும்மேற்​பட்ட சாதாரண கட்​ட​ணப் பேருந்​துகளில் இத்​திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டது. இதன்​படி, சென்​னை​யில் 1,559 சாதாரண கட்​ட​ணப் பேருந்​துகளில் பெண்​கள் இலவச​மாக பயணம் செய்​கின்​றனர். நகர்ப்​புறங்​களில் வெள்ளை போர்டு கொண்ட பேருந்​துகளி​லும், கிராமப்​புறங்​களில் நகரப் பேருந்​துகளி​லும் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. இதற்கு பெண்​களிடம் வரவேற்பு கிடைத்​ததை அடுத்​து, திருநங்​கைகள், மாற்​றுத் திற​னாளி​களுக்​கும் இத்​திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்​டது.

இதனால், அரசுப் பேருந்​துகளில் பயணம் செய்​யும் பெண்​களின் எண்​ணிக்​கை​யும் 62 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது. இத்திட்டத்திற்கு ‘மகளிர் விடியல் பயணம்’ என்று பெயரிடப்பட்டு, பேருந்துகளின் முகப்பு மற்றும் பின்புறக் கண்ணாடிகளில், டிஸ்பிளே போர்டுகளில் அவ்வாறே காட்சிப்படுத்தப்பட்டது. பணிக்குச் செல்லும் பெண்கள், சிறு தொழில் புரியும் மகளிர் மற்றும் கல்லூரி மாணவிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டம், புதிய அரசின் கீழும் எவ்வித தடையுமின்றித் தொடர்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் மாதம் ரூ.888 வரை சேமிக்கவும் உதவியது. தற்போது தமிழ்நாட்டில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றம் செய்து வருகிறது.

அந்த வரிசையில் ‘விடியல்’ என்ற வார்த்தையை நீக்கி விட்டு, சுருக்கமாக ‘மகளிர் பயணம்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து மண்டலப் பேருந்துகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. விடியல் என்ற வார்த்தையை நீக்கியதற்கு பெண்கள் மத்தியில் தவெக அரசுக்கு கண்டனக் குரல் எழுந்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் தவெக அரசை வறுத்தெடுத்து வருகின்றனர். பெண்கள் பெருமளவில் பயன் அடைந்து வரும் இந்த திட்டத்தின் பெயரை நீக்குவதில் தவெக ஏன் இந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், மகளிர் விடியல் பயண திட்டத்தையே முடக்கும் வகையில் தவெக அரசு செயல்பட்டு வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழகத்தில் உள்ள பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விடியல் என்ற பெயரைத் தான் தவெக அரசு நீக்குகிறது என்ற நிலையில் தற்போது இந்த திட்டத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளையும் நிறுத்தி வருவதாக வெளியாகி வரும் தகவல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த மாதத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட விடியல் பயண பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மகளிர் விடியல் பயணத் திட்ட பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை என பெண்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். சென்னை மாநகரில் மகளிர் விடியல் பயணப் பேருந்துகள் குறைப்பால் பெண்கள் அதிர்ச்சியடைத்துள்ளனர்.

சென்னையில் மொத்தம் 162 பேருந்து சேவைகள் திடீரெனக் குறைக்கப்பட்டுள்ளதால் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல வழித்தடங்களில் இந்த இலவசப் பேருந்துகள் சரிவர இயக்கப்படுவதில்லை எனவும், இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் மகளிர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சேவை குறைப்புப் பெண்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதேபோன்று தமிழகம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விடியல் பயணத்துக்காக இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலும் குறைக்கப்பட்டு வருவதால், இந்த பேருந்துகளுக்காக காத்திருக்கும் பெண்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் குறிப்பிட்ட நேரத்தில் வேலைகளுக்கு செல்ல முடியாமல் தவிப்பதாக தகவல் வெளியாகி வருவது தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் ெகாந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: