×

கரூரில் மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், தவிக்கவிட்டு சென்றவர்கள் யார்.!! எல்லாம் மக்களுக்கு தெரியும்..

சென்னை: கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார்!! மாறாக தவிக்கவிட்டு சென்றவர்கள் யார் என மக்கள் அனைவருக்குமே தெரியும் என திமுக எம்.பி கனிமொழி முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இன்று கரூர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய் வழக்கம் போல, கரூர் துயர சம்பவத்திற்கு திமுக மற்றும் கரூர் போலீஸ் தான் காரணம் என்று குற்றம்சாட்டி பேசியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. நண்பகல் 12 மணிக்கு கரூர் வருவதாக கூறி மக்களை சுட்டெரிக்கும் வெயிலில் சுமார் 6 முதல் 7 மணி நேரம் வெயிலில் காக்க வைத்து விட்டு, மிகவும் தாமதமாக விஜய் வந்ததால் தான் கூட்ட நெரிசல் அதிகமாகி விபத்து ஏற்பது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறி உள்ளார்.

இந்நிலையில் கரூர் விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் குற்றசாட்டுகளுக்கு பதில் அளித்து பேசிய திமுக எம்பி கனிமொழி, கரூர் விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், முதலமைச்சர் விஜய் அதற்குரிய பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார். கரூர் துயர சம்பவத்தின் போது களத்தில் நின்று மக்களுக்கு உதவியது யார், மக்களைத் தவிக்க விட்டு சென்றது யார் என்பது அங்குள்ள மக்களுக்கு நன்றாக தெரியும். விசாரணை வளையத்தில் இருக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் குறித்து பொதுவெளியில் பேசுவதைத் தவிர்ப்பதே நல்லது. முதல்வர் விஜய் பொறுப்புணர்வு கொண்டிருப்பதாக தெரியவில்லை, ஆனால் நான் இந்த விவகாரத்தில் பொறுப்போடு நடந்து கொள்ள விரும்புகிறேன். எனவே இது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என்று சொல்லி விட்டு செய்தியாளர்களை கடந்து சென்றார்.

Tags : Karur ,Chennai ,Dimuka M. P Kanimozhi ,Vijay ,
× RELATED எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல்...