×

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்

சென்னை: பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். தரமணியில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செழியன் காலமானார்.

செழியன் ‘கல்லூரி’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’, ‘ஜோக்கர்’, ‘ரெட்டை சுழி’ உள்ளிட்ட பல முக்கியப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘பரதேசி’ படத்திற்காக லண்டன் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் பெற்றார்.

மேலும் இவர் இயக்கி, ஒளிப்பதிவு செய்த ‘டூலெட்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்று சர்வதேச அளவில் கவனம் பெற்றது. மேலும் அப்துல் கலாம் மற்றும் ஜெயகாந்தன் பற்றிய குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

இதர பங்களிப்புகள்: சிறந்த எழுத்தாளரான இவர் ‘உலக சினிமா’ என்ற நூலை எழுதியுள்ளார். புதிய படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கில் ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ என்ற பயிற்சி மையத்தையும் நடத்தி வந்தார்.

இந்நிலையில் செழியன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவு தமிழ்த் திரையுலகினரிடையேயும் ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Sezhiyan ,Chennai ,Taramani ,
× RELATED பிரான்ஸ் வெற்றி: உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை!