×

ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான விழிப்பு, கண்காணிப்புக் குழு சீரமைப்பு

 

சென்னை: ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான விழிப்பு, கண்காணிப்புக் குழுவை தமிழ்நாடு அரசு சீரமைத்தது. முதலமைச்சர் தலைமையிலான குழுவில் பட்டியலின, பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 37 பேர் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர்கள் மரிய வில்சன், வன்னிஅரசு, ராஜ்மோகன், லோகேஷ் தமிழ்ச்செல்வன் குழுவில் இடம்பெற்றுள்ளனர். எம்.பி.க்கள் ஆ.ராசா, திருமாவளவன், தனபால், ராணி ஸ்ரீகுமார், சசிகாந்த் செந்தில், ரவிக்குமார் இடம்பெற்றுள்ளனர்.

மாநில அளவிலான உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஆண்டிற்கு இருமுறை கூட்டப்பட்டு கீழ்குறிப்பிட்டுள்ள பொருண்மைகள் குறித்து ஆய்வு செய்யும்:-
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989 மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச் சட்டம், 2015 ஆகியவற்றின் செயலாக்கத்தை ஆய்வு செய்தல்,

* இன்னலுற்றோர் மற்றும் சாட்சிகளுக்கு நீதி கிடைப்பதற்கான உரிமையை நிலைநாட்டல்,

* வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு பற்றிய விவரங்கள்,

* இந்தச் சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகள் குறித்து,

* இச்சட்டத்தைச் செயற்படுத்தும் பல்வேறு அலுவலரின் மற்றும் அமைப்புகளின் பங்கு, பணி,

* மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள்,

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச் சட்டம் 2015-இல் அத்தியாயம் IV-A இல் உள்ள பிரிவுக் கூறு 15 A(11)-இன்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் குறித்து ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Adi Dravidar ,Tribal Welfare Department ,Committee Alignment ,Chennai ,Tamil Nadu government ,Chief Minister ,MARIYA WILSON ,VANNIARASU ,RAJMOGAN, ,LOKESH ,
× RELATED அதிமுக துணை கொள்கைப் பரப்புச்...