×

300 நட்சத்திர ஓட்டல்களில் பணம் செலுத்தாமல் மோசடி: 36 ஆண்டுகளாக ஏமாற்றியவர் கைது

புவனேஷ்வர்: கடந்த மாதம் 27ம் தேதி சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் உள்ள ஹயாத் ஐந்து நட்சத்திர ஒட்டலில் ஜான் என்பவர் தங்கியிருந்தார். இவர் தனது அறை வாடகை ரூ.63755 செலுத்தாமல் அங்கிருந்த ரூ.1லட்சம் மதிப்புள்ள வாடகை லேப்டாப்புடன் தலைமறைவானார். ஒடிசாவின் புவனேஷ்வரில் தங்கியிருந்த பிங்சன் ஜான்(69) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இவர் கடந்த 36 ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆடம்பர ஓட்டல்களுக்கு சென்றுள்ளார். அங்கு இதேபோன்று தங்கியிருந்துவிட்டு பின்னர் கட்டணத்தை செலுத்தாமல் தலைமறைவாகி வந்துள்ளார். 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள கிட்டதட்ட 300 ஓட்டல்களை குறிவைத்து ஓட்டல் ஊழியர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக தன்னை வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டி, ஆங்கில ஆசிரியர் அல்லது யோகா பயிற்றுவிப்பாளர் என்று அவர் கூறிக்கொண்டுள்ளார்.

மேலும் விசாரணையில் இவர் பிகினி கொலையாளி என்று குறிப்பிடப்படும் உலகின் மிகவும் மோசமான தொடர் கொலையாளி மற்றும் மோசடிக்காரர்களின் ஒருவரான சார்லஸ் சோப்ராஜை பின்பற்றியதாகவும் தெரிவித்துள்ளார். இவரது தந்தை இந்தியர், தாய் வியட்நாமைச் சேர்ந்தவர்.

Tags : Bhubaneswar ,John ,Hyatt Hotel ,Raipur, Chhattisgarh ,Bhubaneswar, Odisha… ,
× RELATED குஜராத்தில் பயிற்சியின்போது...