×

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82 ஆக குறைக்க வேண்டும்: கெஜ்ரிவால் கோரிக்கை

புதுடெல்லி:உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில்,பெட்ரோல் விலையை தற்போதுள்ள லிட்டருக்கு ரூ. 102-லிருந்து ரூ. 82 ஆகக் குறைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார் . இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில், ‘சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், பல மாதங்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாததால் இந்திய நுகர்வோர் அதன் பலனைப் பெறவில்லை.

உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்த போதிலும், எண்ணெய் நிறுவனங்கள் சட்டவிரோத லாபம் ஈட்ட ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. குறைந்த கச்சா எண்ணெய் விலையின் பலன்களை நுகர்வோருக்கு அரசு வழங்க வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102- லிருந்து ரூ. 82 ஆக குறைக்க வேண்டும். டீசல் விலையையும் குறைக்க வேண்டும்’ என்றார்.

 

Tags : Kejriwal ,New Delhi ,Aam Aadmi Party ,coordinator ,Arvind Kejriwal ,Kejriwal… ,
× RELATED குஜராத்தில் பயிற்சியின்போது...