×

பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தவெக அரசுக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

 

மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயரில் விடியல் என்பதை நீக்கிய தவெக அரசுக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்; மகளிரின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயரை மாற்றுவது, மக்கள் நலனுக்கான நிர்வாக நடவடிக்கை அல்ல; அரசியல் அடையாளங்களை அழிக்கும் முயற்சி மட்டுமே. ஒரு திட்டத்தின் வெற்றியை அதன் பெயர் தீர்மானிக்காது.

அது மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய முன்னேற்றம்தான் தீர்மானிக்கும். பெயர் மாற்றங்களில் செலவிடும் நேரத்தையும் ஆற்றலையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்களிலும், சேவைகளை வலுப்படுத்துவதிலும் செலவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Gold South Rasu ,Daveka ,Former Minister ,Thangam Tennarasu ,Dawn ,
× RELATED காங். கட்சித் தலைமை அளித்த மனுவை...