×

கபிஸ்தலம் அருகே மரத்தில் பைக் மோதி சிறுவன் பரிதாப பலி

 

தஞ்சை, ஜூலை 9: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே உள்ள தென்சருக்கை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவரது மகன் வைரதம்பி (17). இவர் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பைக்கில் புத்தூர் சென்றார். கும்பகோணம்-திருவையாறு சாலையில் மேட்டுத்தெரு பாலம் அருகில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வைரதம்பி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, எஸ்.ஐ இளையராஜா விசாரணை நடத்தினர். பின்னர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Kapisthalam ,Thanjavur ,Aasaithambi ,Thensarukkai Pillayar Koil Street ,Papanasam ,Thanjavur district ,Vairathambi ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்