தஞ்சாவூர், ஜூலை 9: தஞ்சை பழைய பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள பள்ளத்தை சீர் செய்ய வேண்டும் என தஞ்சை மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அம்மாபேட்டை, மாரியம்மன் கோவில், சாலியமங்கலம், நீடாமங்கலம் மற்றும் மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், பிள்ளையார்பட்டி, வல்லம், அரியலூர், பெரம்பலூர், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கண்டியூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.
