×

ரவுடிக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த இளம்பெண் கைது

 

திருவிடைமருதூர், ஜூலை 8: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சாக்கோட்டையை சேர்ந்தவர் பத்மகுமரன். இவருக்கும் திருபுவனத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான குருமூர்த்திருக்கும் (38) பணம் கொடுக்கல் வாங்கல் ெதாடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் குருமூர்த்தி, நண்பர்களுடன் சேர்ந்து பத்மகுமரன் வீட்டு முன் நின்ற கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசினார். இதில் கார் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக குருமுர்த்தி, நடுவகரை ராம்குமார் (30), பழவத்தான் கட்டளை தர்மராஜ்(33), திருவிடைமருதூர் சர்வேஷ்(19), திருபுவனம் சக்தி பிரகாஷ்(28), ஆதித்யன்(21) மற்றும் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட தர்மராஜ், குருமூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குருமூர்த்தியின் உறவினரான கும்பகோணம் மாதுளம்பேட்டை தெற்கு வள்ளுவர் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மனைவி சுபாவை(25) நேற்று நாச்சியார் கோவில் போலீசார் கைது செய்தனர். இவர் குருமூர்த்திக்கு நாட்டு வெடிகுண்டு தயாரிக்க உதவியாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் சுபாவை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Tags : Thiruvidaimarudur ,Padmagumaran ,Chakottai ,Thanjavur district ,Gurumurthy ,Thirubuvanam ,
× RELATED வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்