×

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100% நேர்மையாக நடக்கிறதாம்; அரசு பள்ளி, அலுவலகங்களில் அமைச்சர்கள் தேவையில்லாத ஆய்வுகள் செய்ய வேண்டாம்: முதல்வர் உத்தரவிட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

சென்னை: அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நேர்மையாக நடக்கிறது. அரசு பள்ளி மற்றும் அலுவலகங்களில் தேவையில்லாத ஆய்வுகள் செய்ய வேண்டாம் அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

சென்னை தலைமை செயலகத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:
அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதுவரை அரசு வழக்கறிஞர்களாக யாரும் நியமிக்கப்படவில்லை. நேற்று மாலை முதல் தான் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100% நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் நடைபெறுகிறது. முறையாக விண்ணப்பம் பெறப்பட்டு அரசு வழக்கறிஞர் நியமனம் நடைபெறுகிறது. தகுதியானவர் மட்டுமே அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுவார்கள். அரசு வழக்கறிஞர் நியமனத்திஅம்ல் யாராவது பணம் பெற்றால் புகார் தெரிவிக்கலாம். எங்காவது முறைகேடு நடைபெறுவதாக புகார் கொடுக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எந்த பாகுபாடும் இல்லை. (கடந்த வாரம் முதலே அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது)

இப்போது கொடுக்கப்படும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் என்பது 6 மாத காலத்திற்கானது மட்டுமே. செயல்பாடுகளை பொறுத்து 6 மாதத்திற்கு பிறகே அரசு வழக்கறிஞர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள். அதிகபட்சம் 800 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இன்னும் தேவைப்பட்டால் கூடுதலாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்கவும் அரசு தயாராக உள்ளது. இன்று அல்லது நாளைக்குள் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். அரசு ரீதியாக, காவல்துறை ரீதியாக முறையாக சரிபார்த்து பின்னரே அரசு வழக்கறிஞர் நியமனம் செய்யப்படுகின்றனர். அரசு வழக்கறிஞர்கள் நேர்மையாக செயல்படுவதை உறுதிப்படுத்தவே முதலில் தற்காலிக நியமனம். அரசு வழக்கறிஞர்கள் திறமையாக செயல்படவில்லை என்றால் தொடர்ந்து பணியாற்ற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து மாணவியிடம் கேள்வி கேட்டது சர்ச்சையான நிலையில் அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளிக்கையில், “அரசு பள்ளி மற்றும் அலுவலகங்களில் தேவையில்லாத ஆய்வுகள் செய்ய வேண்டாம் என முதல்வர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் எந்த நோக்கத்தில் ஆய்வு செய்துள்ளார் என தெரியவில்லை. அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ஆய்வு நடத்தக்கூடாது” என்று கூறினார்.

Tags : Minister ,Nirmal Kumar ,Chief Minister ,Chennai ,Vijay ,Minister of Electricity and Law ,Chief Secretariat ,
× RELATED மற்ற அமைச்சர்கள் எல்லாம் நைட்...