×

சில்லி பாயின்ட்…

* வங்கதேச அணியுடன் ஹராரேவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே 25 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஜிம்பாப்வே 36.4 ஓவரில் 141 ரன்னுக்கு ஆல் அவுட். வங்கதேச பந்துவீச்சில் நஹித் ராணா 10 ஓவரில் 2 மெய்டன் உள்பட 21 ரன்னுக்கு 6 விக்கெட், தஸ்கின் 2, மிராஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். வங்கதேசம் 33.1 ஓவரில் 116 ரன்னுக்கு சுருண்டது.

* இந்தியா யு-19 அணியுடன் அம்பாந்தோட்டையில் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை யு-19 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்தியா யு-19 அணி 47.2 ஓவரில் 285 ரன்னுக்கு ஆல் அவுட் (அன்வே டிராவிட் 87, அர்ஜுன் ராஜ்புத் 76). இலங்கை யு-19 அணி 48 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 291 ரன் (திமந்தா மகாவிதனா 155*, செனுஜா வெகுனகோடா 60, கேப்டன் விமத் தின்சரா 56*).

Tags : Harare, Zimbabwe ,Zimbabwe ,Nahid Rana ,
× RELATED உலகக் கோப்பை கனவு முடிவு: கண்ணீருடன் வெளியேறிய கிறிஸ்டியானோ ரொனால்டோ!