×

விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் மெர்டென்ஸ்

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டென்ஸ் தகுதி பெற்றார். 4வது சுற்றில் செக் குடியரசின் மேரி பவுஸ்கோவாவுடன் நேற்று மோதிய மெர்டென்ஸ் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 52 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 4வது சுற்றில் மார்தா கோஸ்டியுக் (உக்ரைன்) 6-4, 6-4 என நேர் செட்களில் அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

முன்னதாக, நம்பர் 1 வீராங்கனை அரினா சபலெங்கா தனது 4வது சுற்றில் 2-6, 6-7 (2-7) என்ற நேர் செட்களில் ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். செக் குடியரசின் கரோலினா முச்சோவா, அமெரிக்காவின் கோகோ காப் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நம்பர் 1 வீரர் யானிக் சின்னர் (இத்தாலி) 6-3, 7-6 (7-0), 6-3 என்ற நேர் செட்களில் ஜப்பானின் ஷின்டரோ மோச்சிஸுகியை வீழ்த்து காலிறுதிக்கு தகுதி பெற்றார். கனடாவின் ஆகர்-அலியஸ்ஸிமி தனது 4வது சுற்றில் 6-7 (4-7). 7-6 (8-6), 6-3, 6-7 (2-7), 6-1 என 5 செட்கள் கடுமையாகப் போராடி ஸ்பெயினின் டேவிடோவிச் ஃபோகினாவை வீழ்த்தினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 4 மணி, 26 நிமிடத்துக்கு நீடித்தது.

Tags : Mertens ,Wimbledon ,London ,Elise Mertens ,Wimbledon Grand Slam tennis ,Czech Republic ,Marie Bouzkova ,
× RELATED உலகக் கோப்பை கனவு முடிவு: கண்ணீருடன் வெளியேறிய கிறிஸ்டியானோ ரொனால்டோ!