தேவையான பொருட்கள்:
வல்லாரைக் கீரை 20-25 இலைகள்
தண்ணீர் 2 கப்
பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப் பால் 1/2 லிட்டர்
அகர் அகர் (China Grass) ஜெல்லி
½ கப் (சிறு துண்டுகளாக வெட்டியது)
சப்ஜா விதை 1 டேபிள்ஸ்பூன் (10 நிமிடம் ஊறவைத்தது)
பாதாம் பிசின் – 4 டேபிள் ஸ்பூன் (ஊற வைத்தது)
புதினா இலை சிறிதளவு
ஐஸ் கட்டிகள் தேவைக்கேற்ப.
செய்முறை:
வல்லாரைக் கீரையை நன்றாக கழுவி, தண்ணீருடன் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அரைத்த கலவையை வடிகட்டி சாற்றை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அதில் பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கரையும் வரை கலக்கவும். அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும். அகர் அகர் சேர்த்து கரையும் வரை கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து ஜெல்லி பதம் வந்ததும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
பரிமாறும் கண்ணாடியில் ஊறவைத்த சப்ஜா விதை மற்றும் பாதாம் பிசின் ஆகியவற்றை சேர்க்கவும்.
அதன் மீது வல்லாரை ஜெல்லி சேர்த்து, ஐஸ் கட்டிகள் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து குளிர்ச்சியாக பரிமாறவும்.
மேலே புதினா இலைகளைத் தூவி அலங்கரிக்கலாம்.
மருத்துவ பயன்கள்:
மூளையின் செயல்திறன், நினைவாற்றல் மற்றும் கவனிக்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது.
நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி மன அமைதியை அளிக்க உதவுகிறது.
உடல் சூட்டைக் குறைத்து கோடைக்காலத்தில் புத்துணர்ச்சி தருகிறது.
ஜீரணத்தை சீராக்கி மலச்சிக்கலைக் குறைக்க உதவுகிறது.
அகர் அகர் ஜெல்லி நார்ச்சத்து நிறைந்ததால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
சப்ஜா விதை உடலை குளிர்ச்சியாக வைத்திருந்து நீரிழப்பைத் தடுக்க உதவுகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வல்லாரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சரும ஆரோக்கியம் மற்றும் உடல் சோர்வு குறைவதற்கும் உதவக்கூடும்.
குறிப்பு: இந்த பானம் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும், வல்லாரைக் கீரையை தினமும் அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்கவும். நீண்டகால நோய்களுக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் அல்லது கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துவது நல்லது.
– ஹேமலதா வாசுதேவன்
