×

வாழைப்பூ குருமா

தேவையான பொருட்கள்:
*வாழைப்பூ – 1
*சின்ன வெங்காயம் – 20(நறுக்கியது)
*பச்சை மிளகாய் – 1 (கீறியது)
*மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
*கொத்தமல்லித் தூள் – 1/2 ஸ்பூன்
*சீரகத் தூள் – 1/2 ஸ்பூன்
*தேங்காய்ப் பால் – 3/4 கப்
*சீரகம் – 1/2 ஸ்பூன்
*கறிவேப்பிலை – சிறிதளவு
*எண்ணெய் – 2 ஸ்பூன்
*உப்பு – தேவையான அளவு
*தண்ணீர் – தேவையான அளவு
*எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
*அரிசி மாவு – 1 ஸ்பூன்

செய்முறை:
*முதலில் வாழைப்பூவை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த வாழைப்பூவை சமைக்கும் வரை மோரில் ஊற வைக்கவும். சமைக்கும் போது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
*தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்து அதில் முக்கால் கப் வெந்நீர் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
*ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெயைச் சூடாக்கி, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடிப் பதம் வரும் வரை வதக்கவும்.
*வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் சீரகத் தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.
*பின்னர் தேங்காய்ப் பாலை சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்க்கவும். தேங்காய்ப்பால் கொதிக்கத் தொடங்கும் போது மோரில் ஊற வைத்த வாழைப்பூவை சேர்க்கவும்.
*தேவையான அளவு உப்பு சேர்த்து, காரம் மற்றும் சுவையைச் சரிபார்க்கவும். குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
*அடுப்பை அணைத்துவிட்டு, ஆவி வெளியேறிய பிறகு குக்கரைத் திறக்கவும். எண்ணெய் மிதந்து வரும் போது நன்றாகக் கலக்கவும். குழம்பு மிகவும் தண்ணியாக இருந்தால், சிறிதளவு அரிசி மாவை தண்ணீரில் கரைத்து. குழம்பில் சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
*குழம்பு நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.

Tags :
× RELATED கருப்பு கவுனி அரிசி பாயாசம்