டெல்லி: வங்க கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. நேற்று முன்தினம் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடல், ஒடிசா-மேற்கு வங்க கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு ஒடிசா கடலோர பகுதியில் கரையை கடக்கக்கூடும். ஒடிசாவின் பாலசோருக்கு 50 கி.மீ. தெற்கு தென்கிழக்கிலும், மேற்கு வங்கம் டிக்காவுக்கு 60 கி.மீ. தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா -வடக்கு சத்தீஸ்கர் வழியே நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
